Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டுள்ள இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள  ஐக்கிய நாடுகள் செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இராவண பலய உள்ளிட்ட அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நாட்டினைப் பாதுகாத்த இராணுவத்தை பழிவாங்கவும், கடந்த ஆட்சியாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் மண்டியிட வைப்பதற்குமே பான் கீ மூன் இலங்கை வந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் கோசம் எழுப்பினர்.

0 Responses to பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com