இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, அரசியல் தீர்வு, காணாமற்போனோர் விவகாரம், போர்க்குற்ற விசாரணைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சந்திப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொது நூலக வாயிலில் காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

0 Responses to பான் கீ மூன் - கூட்டமைப்பு சந்திப்பு!