அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பவர்கள், மாற்றுத் தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எந்தவித செயற்திட்டங்களும் இன்றி விமர்சனங்களை மாத்திரம் முன்வைப்பதால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஜனவரி 8ஆம் திகதி நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில், இன்று நாட்டின் நிலமை மிக மோசமாகியிருக்கும் என்று கூறியுள்ள ஜனாதிபதி, நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியான பிரச்சினைகளுக்கு அரசாங்கம் வெற்றிகரமாக முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று என்ன நடந்திருக்கும்? என்பதை அரசாங்கத்தையும் தம்மையும் விமர்சிப்பவர்களிடம் கேட்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மலிக் ஜயதிலக்கவின் “நான் கண்ட ஜனவரி – 8” நூல் வெளியீட்டு விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்காமல், மாற்றுத் தீர்வினையும் முன்வையுங்கள்: ஜனாதிபதி