ஜூலையில் துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டதில் இருந்து அங்கு உடனடியாக அவசர காலச் சட்டம் பல வாரங்களாக அமுலுக்கு தொடர்ந்து இருந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த அவசரகாலச் சட்டம் ஆக்டோபர் 19 இல் தொடங்கி இன்னமும் 3 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் என துருக்கியின் பிரதிப் பிரதமர் நுமான் குர்ட்டுல்முஸ் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.
வாராந்த கேபினேட் சந்திப்பு நிறைவுற்று செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே நுமான் இத்தகவலை அளித்துள்ளார்.
அமெரிக்காவின் ஆதரவுடன் செயற்பட்ட ஃபெதுல்லா குலென் என்பவரே குறித்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் நின்று சதி செய்தவர் என்றும் இதற்கும் அமெரிக்காவே காரணம் என்றும் துருக்கி அதிகாரிகள் அமெரிக்காவை சாடியிருந்தனர். மேலும் கடந்த வாரம் துருக்கி அதிபர் றெசெப் டய்யிப் எர்டோகன் வெளியிட்ட தகவலில் துருக்கியில் இன்னமும் 1 வருடத்துக்கு அவசர கால சட்டம் அமுலில் இருப்பது அவசியம் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கி நீதித்துறை தகவல் படி குலென் உடன் தொடர்புடைய இன்னமும் சுமார் 32 000 சந்தேக நபர்கள் காவற்துறையின் கஸ்டடியில் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

0 Responses to துருக்கியில் அவசர காலச் சட்டம் இன்னமும் 90 நாட்களுக்கு நீடிப்பு: பிரதிப் பிரதமர்