புதுவை மாநிலத்திலும் தமிழகத்தைப் போல் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட உரிமைகள் வழங்க மாநில அரசு வழங்கி வருகிறது.
புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். தமிழகத்தைப் போல், தனி ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சலுகைகள் வழங்க வேண்டி, கலெக்டரிடம் திருநங்கைகள் கோரிக்கை விடுத்தனர். இதைப் பரிசீலித்த புதுவை அரசு, இவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க முடிவெடுத்தது. காரைக்காலில் நடந்த நிகழ்ச்சியில், துளசிமணி என்ற திருநங்கைக்கு கலெக்டர் பார்த்திபன், ரேஷன் கார்டை வழங்கினார்.
மேலும், வாக்காளர் அடையாள அட்டைகளும் இவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

0 Responses to புதுவையிலும் தமிழகத்தைப் போல் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட உரிமைகள்