எல்லையில் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய-பாஸ்கிதான் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவம் உடந்தையாக உள்ளதால், இந்திய எல்லையில் எப்போதும் தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம் நிலவி வருகிறது. இந்த தீவிரவாதிகள் எதிர்பாராத தாக்குதல்களையும் நிகழ்த்தி உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, நாட்டின் பாதுகாப்புக் குறித்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைப்பெற்றதாகத் தெரிய வருகிறது. அப்போது வருகிற 2018ம் ஆண்டு வரை எல்லையில், சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா தயாராகி உள்ளது என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மேலும், நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to எல்லையில் சீல் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் : ராஜ்நாத் சிங்