முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்றும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
சிறப்பு விமானம் மூலம் காலை 11.15மணிக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை விமான நிலையம் வந்தார். உடனடியாக அங்கிருந்து அப்போலோ மருத்துவ மனைக்கு முதல்வரை பார்க்க வந்த ராகுல் காந்தி, சுமார் 20 நிமிடங்கள் மருத்துவ மனையில் இருந்தார்.பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது முதல்வரின் உடல் நலம் குறித்து அறிய திடீரென புறப்பட்டு வந்ததாகவும், முதல்வரின் உடல் நிலை நன்றாகத் தேறி வருகிறது என்றும் கூறினார்.விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கைத் தெரிவித்த ராகுல் காந்தி, உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.
ராகுல் வருகையால் அப்பலோ மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தீடீரென முடிவெடுக்கபட்ட திட்டமாக கூறப்படுகிறது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார்: ராகுல் காந்தி