Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் காரியாலயங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற  தமிழ்ப் பொலிஸாரை தங்களது பணிகளிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்குமாறு வலியுறுத்தும் அனாமதேய துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ள விடயத்தில் நீதி கிடைக்கும் வரையில், தமிழ்ப் பொலிஸார் தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும். அல்லது, வடக்கு கிழக்கிற்கு அப்பால் இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றும் அந்தப் துண்டுப்பிரசுரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில்  அந்தத் துண்டுப்பிரசுரம் உரிமை கோரியிருக்கின்றது.

0 Responses to தமிழ்ப் பொலிஸாரை விலகக் கோரி ‘பிரபாகரன் படை’ எனும் பெயரில் அனாமதேய துண்டுப்பிரசும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com