Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கமடு  எனும் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திடீரென வந்த குழுவொன்றினால் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.

சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வரும் பழமைமிக்க மாணிக்கமடு எனும்  இக்கிராமத்தின் மாயக்கல்லிமலையின் உச்சியில் இச்சிலை வைக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த கொடிக்கம்பங்களும் அங்கு பறக்கவிடப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.

அம்பாறையிலிருந்து டிப்பர் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்ட இந்த பாரிய புத்தர் சிலையுடன் வான் மற்றும் ஜீப்வண்டிகள் என பல வாகனங்கள் சகிதம் பௌத்த பிக்குகளும், நூற்றுக்கணக்கான சிங்களவர்களும் பொலிஸாரின் உதவியுடன் அங்கு வாகனங்களில் வந்து இறங்கியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லாண்டு காலமாக அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எல்லைக் கிராமங்களிலுள்ள முஸ்லிம், சிங்கள மக்களுடன் மிகவும் சகோதரத்துவ மனப்பாங்குடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் என்பனவற்றை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடு இனக்குரோதங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தும் என அக்கிராமவாசிகள் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுபான்மை மக்களின் வாழும் உரிமை மறுக்கப்படுவதுடன் இச்செயற்பாடு மக்கள் மனதில் அச்சமான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

பௌத்தர்கள் எவரும் அந்தக் கிராமத்தில் வாழ்ந்து வந்திராத நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸாரின் உதவியுடன் அடாவடித்தனமாக பௌத்த சிலை அமைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மக்கள் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

0 Responses to அம்பாறை இறக்காமத்தில் அத்துமீறி புத்தர் சிலை வைப்பு; பிரதேச மக்கள் அச்சம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com