யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை சந்தித்து உரையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து கற்றல் நடவடிக்கைகளை புறக்கணித்து கடந்த ஒரு வாரகாலமாக போராடி வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், இன்று திங்கட்கிழமை யாழ். பல்கலைக்கழக நிர்வாக நடவடிக்கைகளையும் முடக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும், மாணவர் பிரதிநிதிகளுடனும் பேச்சுக்கள் நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்தப் பேச்சுக்களின் பின்னரே, மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0 Responses to பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க ஏற்பாடு!