பாகிஸ்தான் போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது என்று, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய நவாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து உரிய விசாரணையை இந்தியா மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். விசாரணை நடத்தாமலேயே உரி தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து விவகாரங்களிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாக உள்ளது என்றார்.
மேலும் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்றும், அமைதியை விரும்புவதாகவும் நவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to பாகிஸ்தான் போரை விரும்பவில்லை; அமைதியையே விரும்புகிறது: நவாஸ் ஷெரீப்