விவாகரத்து வழக்கு ஒன்றில் சமூகத்துக்குத் தேவையான கருத்துக்களை பதிவு செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தம்மை பேணி வளர்த்த பெற்றோரை பேணுவது பிள்ளைகளின் கடமை என்று அறிவுறுத்தி உள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் வயதான பெற்றோரை பிரிந்து தனிக்குடித்தனம் செய்ய வற்புறுத்துவதாகவும், பெற்றோருக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் மனுதாரர் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மனுதாரருக்கு விவாக ரத்து வழங்கித் தீர்ப்பளித்தது..
ஆனால், மாநில உயர் நீதிமன்றத்தில் மனைவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கணவரின் சம்பாத்தியத்தை அனுபவிக்க மனைவிக்கு மட்டுமே உரிமை உள்ளது என்று கூறியிருந்தார். உயர் நீதிமன்றம் கீழமை நீதிமன்றம் வழங்கிய விவாக ரத்தை ரத்து செய்துத தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து கணவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சமூகத்துக்கு அத்தியாவசியமான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
அதில், பிள்ளைகளை பெற்று அவர்களை பேணிக்காத்து, கல்வியும் கொடுத்த பெற்றோரை விடுத்து, பிரிந்து வந்து குடும்பம் நடத்தலாம் என்பது, நமது சமூகத்துக்கு நடைமுறை அல்ல.இது மேற்கத்திய கலாச்சாரம். இது நமது சமூகத்துக்குப் பொருந்தாது. தம்மைப் பேணி வளர்த்த பெற்றோரை, பிள்ளைகள் பேணி பாதுகாப்பது பிள்ளைகளின் கடமை.அதுவும் வருமான ஈட்டுபவர் இந்த பிள்ளைதான் எனும்போது, அவரது சம்பாத்தியத்தை மனைவி மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்பது சரியல்ல என்று கூறியுள்ளனர்.
மேலும் தனிக்குடித்தனம் வரவில்லை என்றால் தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டுவதும், இதன் மூலம் கணவரை போலீசில் மாட்டிக்கொள்வோமோ என்று நினைக்க வைப்பதும் மன அழுத்தத்தை உண்டாக்கும் குரூர செயல் என்றும் கூறியுள்ள நீதிபதிகள், இப்படிப்பட்ட மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் விவாக ரத்து செய்வதில் தவறில்லை என்றும் கூறி, அவருக்கு விவாக ரத்து வழங்கியுள்ளனர்.

0 Responses to தம்மை பேணி வளர்த்த பெற்றோரை பேணுவது பிள்ளைகளின் கடமை:உச்ச நீதிமன்றம்