பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19வது சார்க் மாநாட்டினை இலங்கை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சார்க் அமைப்பின் தொழிற்பாடுகள் குறித்து தெரியாதவர்களே இவ்வாறான கருத்தைக் கூறிவருவதாக பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அமைச்சரவை அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சார்க் உச்சிமாநாட்டில் எந்தவொரு தீர்மானமும் ஏகமனதாக எடுக்கப்பட வேண்டும். அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லையென மூன்று நான்கு நாடுகள் சார்க் அமைப்பின் தற்போதைய தலைமைத்துவமான நேபாளத்துக்கு அறிவித்துள்ளன. இதன் பின்னரே இலங்கை சார்க் மாநாடு குறித்து அறிக்கையை வெளியிட்டிருந்தது. 19வது சார்க் உச்சிமாநாடு நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் இலங்கை அதில் கலந்துகொள்ளத் தயாராக உள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பு நாடுகள் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதில்லையென அறிவித்துள்ள நிலையில், நடக்காத மாநாட்டை இலங்கை புறக்கணிப்பதாகக் கூறுவது சார்க் பற்றிய அறிவின்மையை வெளிக்காட்டுகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to சார்க் மாநாட்டினை இலங்கை புறக்கணித்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை: மங்கள சமரவீர