முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூரில் திமுக உண்ணாவிரதப் போரட்டத்தில் பேசிய கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க உடனே உண்ணாவிரதம் நடத்த உத்தரவிட்டவர் கருணாநிதி என்று கூறினார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின், காவிரியை வறண்ட ஆறாக மத்தியில் ஆளும் அரசு மாற்றிவிட்டதாக சாடினார். சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ல் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஸ்டாலின், அணையை திறக்க முடியாது என்று அரசு அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர் அதிமுக அரசு அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை பேண முயற்சிக்கவில்லை என்றார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர், கர்நாடக முதல்வருடன் ஒரு முறை கூட பேசவில்லை என்றார். மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தொடர்ந்து தட்டிகழித்து வருகிறது என்றார். காவிரி பிரச்சனையில் துரோகம் செய்த மத்திய அரசை விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்றார். பிரதமரை அவசரத்திற்காக கூட தமிழக அமைச்சர்கள் சந்திக்க இயலவில்லை என்றார். தண்ணீரை பெற வேண்டிய தமிழகத்தில் ஒருமுறை கூட அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட வில்லை என சுட்டிக்காட்டினார்.
அதோடு, முதல்வர் உடல்நிலை விவகாரத்தில் அரசியல் செய்ய திமுக விரும்பவில்லை ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காவிரி போன்ற முக்கிய பிரச்சனைகளில் முடிவெடுக்க தற்காலிக முதல்வர் தேவை என்றார். மேலும் முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டும் எனபதே அனைவரின் விருப்பம் என்றார்.

0 Responses to முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை தற்காலிக முதல்வர் நியமிக்கப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்