யார் என்ன கூறினாலும், புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் தொடர்பில் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவினால் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அது தொடர்பில் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண முதலமைச்சர் முன்னர் கூறியதாக வெளியான கருத்துக்கள் சிலவற்றை அவர் ஏற்கனவே மறுத்துள்ளார். அவர் என்ன கருத்தைக் கூறினாலும் நாட்டில் அரசியலமைப்பொன்று உள்ளது. அதற்கும் அப்பால் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு அரசியல் அமைப்பு சபையாலேயே முன்னெடுக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய கருத்துக்களை முன்வைப்பதற்கு உரிமை இருக்கின்றது. ஆனால் நாம் எமக்கு வேண்டியவாறே புதிய அரசியலமைப்பைத் தயாரிப்போம். அதுவும் நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் மற்றும் கட்சிகள் அனைத்தும் இணங்கி எடுக்கும் தீர்மானத்தையே நடைமுறைப்படுத்துவோம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் மாத்திரமன்றி வேறு பலரும் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். யார் எதைக் கூறினாலும் அரசியலமைப்பு சபையும், வழிநடத்தல் குழுவின் அறிக்கையுமே அடுத்த அரசியலமைப்பை தீர்மானிக்கும்.” என்றுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நாமே தீர்மானிப்போம்: ரணில்