சர்ஜிக்கல் ஆபரேஷன் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து, அங்கு இருந்த பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு சர்ஜிக்கல் ஆபரேஷன் என்று ராணுவத்தில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த சர்ஜிக்கல் ஆபரேஷனை மோடி தமது அரசியல் ஆதாரத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறார் என்று, டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வெளியிட்டுள்ளார். ராணுவ வீரர்களின் வீர செயல்கள் குறித்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் என்று குறை கூற கூடாது என்றும், இந்த நேரத்தில் மோடியுடன் கைக்கோர்த்து துணை நிற்க வேண்டியது நமது கடமை என்றும் கூறியுள்ளதோடு, ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ராகுல் கருத்துக்கு கெஜ்ரிவால் கண்டனம்!