Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதலமைச்சருக்கான அந்தஸ்துள்ள ஒரு நபரையாவது காட்டுங்கள் என்று பா.ஜ.க தொண்டர்களிடம் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் ஆளும் சமாஜ்வாடி கட்சி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செய்து வருகின்றன. 

காங்கிரஸ் கட்சி டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல் அமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை நிறுத்தவில்லை. சமாஜ்வாடியின் தற்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவ்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் சமாஜ்வாடி கட்சிக்குள் தற்போது சண்டை நடைபெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ், முலாயம் சிங், ஷிவ்பால் ஆகியோருக்கிடையேயான சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதை சுட்டிக்காட்டும் பா.ஜ.க தொண்டர்கள், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய அரசில் ஐந்தாறு முதலமைச்சர் உள்ளனர் என்று குற்றம்சாட்டினர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அகிலேஷ் யாதவ் ‘‘பா.ஜ.க தொண்டர்கள் சமாஜ்வாடியின் உத்தர பிரதேச அரசில் ஐந்து முதல் அமைச்சர்கள் உள்ளனர் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில், பா.ஜனதா கட்சியில் முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான ஒரு நபரையாவது தேடுங்கள். பின்னர் அவரை மக்கள் முன் நிறுத்துங்கள்’’ என்று கூறியுள்ளார்.

0 Responses to முதலமைச்சருக்கான தகுதியுள்ள ஒரு நபரையாவது காட்டுங்கள்; பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் சவால்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com