Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2012 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பான அதிபர் போட்டியாளரும் அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் டிரம்பை ஒரு மோசடிக் காரர் எனக் கடுமையாக விமர்சித்து வந்தவருமான மிட் ரோம்னி என்பவரைத் திடீரென டிரம்ப் சந்தித்துள்ளார்.

ஏற்கனவே டிரம்பின் நிர்வாகத்தில் பல சர்ச்சைக்குரிய நியமனங்கள் செய்யப் பட்டுள்ள நிலையில், மிட் ரோம்னியுடனான சந்திப்பை அடுத்து அவர் அமெரிக்க வெளியுறவு செயலாளராக நியமிக்கப் படலாம் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. மிட் ரோம்னியுடனான சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்ததாகவும் இது பயனுள்ளதாக அமைந்ததாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். நியூஜேர்ஸியில் டிரம்பின் தனிப்பட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இவர்கள் இருவரும் முக்கியமாக உலக விவகாரங்கள் குறித்துக்  கலந்து பேசியதாகவும் இதனால் மிட் ரோம்னி சிலவேளை அமெரிக்க வெளியுறவு செயலாளராக நியமிக்கப் படலாம் எனவும் சந்தேகம் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ரோம்னி டிரம்புக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர் அதிபரானால் அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் விளையாடி விடுவார் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிரம்பின் வெளியுறவுக் கொள்கை காரணமாகக் கலக்கம் அடைந்துள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரூம்னி வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப் படும் பட்சத்தில் நிலமை சற்று சீராகும் எனவும் இதனால் டிரம்ப் இனது செயற்பாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பும் உள்ளது என நிம்மதி அடைந்துள்ளன.

 இதேவேளை அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டிரம்ப்பின் அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 3 நியமனங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார். அவையாவன அட்டார்னி ஜெனரலாக ஜெப் சென்ஸ் மற்றும் புலனாய்வுத் துறையான சி ஐ ஏ இன் இயக்குனராக மைக்  பாம்பெயோ மற்றும் தேசிய பாதுகாப்பு செயலாளராக மைக்கேல் பிளின் ஆகியவர்கள் ஆவர்.

0 Responses to டிரம்பை தீவிரமாக விமர்சித்த மிட் ரோம்னியுடன் டொனால்ட் டிரம்ப் திடீர் சந்திப்பு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com