Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக் கணக்கான மக்கள் மஞ்சல் நிற சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நஜீப் ரஸாக்கின் திட்டப்படி உருவாக்கப் பட்ட முதலீட்டு நிதியமான ஒன் எம்டிபி இலிருந்து பில்லியன் கணக்கான பணம் இலஞ்சமாகப் பெறப்பட்டது தொடர்பான வழக்கை  பிரதமர் நஜீப் ரஸாக் எதிர்கொள்ள வேண்டும்  என்பதே ஆர்ப்பாட்டக் காரர்களின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்குப் போலிசார் தடை விதித்த போதும் அசராது இடம்பெற்றதால் பல ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப் பட்டனர். ஊழல் குற்றச்சாட்டை மறுத்துள்ள நஜீப்  இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்திருந்த சீர்திருத்த குழுவான பெர்சியை ஒரு ஏமாற்றுக் குழு எனத் தனது இணைய வலைத் தளத்தில் குறிப்பிட்டுள்ளதுடன் எந்த விதப் போராட்டத்துக்கும் தான் அடிபணியப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சிக் கவிழ்ப்புக்காக எதிர்க் கட்சியினர் பயன்படுத்தும் கருவியாக இந்த ஆர்ப்பாட்டம் அமைந்துள்ளது எனவும் நஜீப் தெரிவித்துள்ளார்.

நஜீப் இன் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள பெர்சி அமைப்பின் துணைத் தலைவர் சஹ்ருல் அமன் ஷாரி நாட்டின் மதிப்பைக் குறைக்கவோ அல்லது அரசைக் கவிழ்ப்பதற்காகவோ இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப் படவில்லை. பதிலாக நாட்டின் அரசாங்கத்தை வலிமையாக்கவே இங்கு நாம் கூடியுள்ளோம் எனத் தெரிவித்திருந்தார். அமைதியாக நடத்தப் பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெர்சி ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புச் சபையான அம்னெஸ்டி கண்டனம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசிய பிரதமர் பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com