பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
2 நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார் மனோகர் பாரிக்கர். எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறியதில் காஷ்மீரின் அப்பாவி பொது மக்கள் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பகலில் தங்களது இல்லங்களிலும், இரவில் முகாம்களிலும் தங்கி வருகின்றனர். சுமார் 300 பள்ளிகள் தொடர்ந்து இயங்காமல் இருந்து வருகின்றன.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார் மனோகர் பாரிக்கர். அப்போது பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் எல்லைத் தாண்டி போர் நடத்த முற்படும்போது இந்திய இராணுவ வீரர்கள் அவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார் மனோகர் பாரிக்கர்.

0 Responses to பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி கொடுக்க இராணுவத்துக்கு பணிப்பு: மனோகர் பாரிக்கர்