Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொங்கோவில் அதிபர் ஜோசெஃப் கபிலா பதவி விலக வேண்டும் எனக் கோரி கின்ஷாஷா உட்பட சில நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படை துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 26 பேர் கொல்லப் பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பக ஆய்வாளர் இடா சாவ்யெர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் கொங்கோவில் பதற்றம் நிலவுகின்றது.

தனது பதவிக் காலம் நிறைவுற்ற போதும் தேர்தல் நடாத்தாது அதில் நீடிப்பதாகக் கூறப்படும் அதிபர் கபிலாவுக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு எதிரணித் தலைவர் எட்டியென்னே சிஷெக்கெடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் பொது மக்கள் மீது அரசு வன்முறையைப் பிரயோகித்து அவர்களை சுட்டுக் கொன்றிருப்பதால் சுமார் 12 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கின்ஷாஷாவில் போராட்டம் வெடிக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

தலைநகர் கின்ஷாஷாவில் ஆர்ப்பாட்டத்துக்குத் தடை விதிக்கப் பட்டதுடன் பாரியளவு இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக பொது மக்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பிரயோகித்தும் அடக்கப் பட்டிருந்தனர். கிழக்கு நகரான கோமாவில் பலர் கைது செய்யப் பட்டுள்ளதும் தெரிய வருகின்றது. கொங்கோ அதிகாரிகளால் அங்கு பல சமூக ஊடகங்கள் முடக்கப் பட்டுள்ளன. ஏற்கனவே 1996 முதல் 2003 வரையிலான கொங்கோ குழப்பநிலையில் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப் பட்டது மேற்குலகை அதிருப்திப் படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு ஒருபோதுமே சமாதான அடிப்படையில் ஆட்சி  மாற்றம் நிகழ்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொங்கோ அதிபர் கபிலாவை சட்டத்தை மதிக்குமாறு ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

0 Responses to அதிபர் ஜோசெஃப் கபிலா இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த 26 பேர் சுட்டுக் கொலை! : கொங்கோவில் பதற்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com