Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் விடுமுறை தினத்தின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத்  திட்டமிட்டிருந்த 3 சந்தேகத்துக்குரிய போராளிகளை அந்நாட்டுப் போலிசார் புதன்கிழமை துப்பாக்கிச் சண்டையின் போது சுட்டுக் கொன்றுள்ளனர். கடந்த இரு வாரங்களில் இவ்வாறு தடுக்கப் பட்ட இரண்டாவது முக்கிய தாக்குதல் சதி இதுவென இந்தோனேசியா அறிவித்துள்ளது.

மேலும் கொல்லப் பட்டவர்கள் மூவரும் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் 5 இலகு ரக குண்டுகள் கண்டு பிடிக்கப் பட்டு செயல் இழக்கப் படச் செய்திருப்பதாகவும் இந்தோனேசிய ஊடகமான TVOne அறிவித்துள்ளது. இந்த மர்ம நபர்கள் கிறிஸ்துமஸ் தினம் அல்லது புதுவருடத் தினத்தில் போலிசாரைக் கத்தியால் தாக்கி விட்டு பொது மக்கள் செறிந்துள்ள சந்தைப் பகுதியில் தமது தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்ததாக ஜகார்த்தா போலிஸ் தலைமை அதிகாரி மொஹம்மட் இரியவான் தெரிவித்துள்ளார்.

தேசிய போலிஸ் பேச்சாளர் றிக்வண்டோ கூற்றின் படி ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் அல்லது  புது வருடம் போன்ற நிகழ்வுகள் தீவிரவாதிகளின் தாக்குதல் இலக்காக இருந்து வருகின்றன எனப்பட்டுள்ளது. உலகின் மிக அதிக முஸ்லிம்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா 2002 ஆம் ஆண்டு பாலித் தீவில் இஸ்லாமியப் போராளிகளின் குண்டுத் தாக்குதலில் 202 பொது மக்களையும் ஜனவரியில் தலைநகர் ஜகார்த்தாவில் ISIS இன் தாக்குதலினால் 8 பேரையும் பலி கொடுத்திருந்தது. இதேவேளை விடுமுறை தினத்தைக் கொண்டாட இந்தோனேசியா செல்லவிருக்கும் தமது மக்களுக்கு அங்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அதிகளவு மட்டத்தில் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தோனேசியாவில் தற்கொலைத் தாக்குதல் முறியடிப்பு : 3 போராளிகள் சுட்டுக் கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com