Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்சிக்கோவின் Tultepec நகரின் வணிகவளாகத்தின் வாணவேடிக்கை விற்பனைப் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, 31 பேர் வரையில் பலியானதாகத் தெரிய வருகிறது.

மெக்சிக்கோவின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள இந்நகரில் செவ்வாய் கிழமை உள்ளுர் நேரம் மாலை 3.00 மணியளிவில் ஏற்பட்ட இவ் அனர்த்தம் காரணமாக இதுவரை 31 பேர் பலியானதாகவும், 70க்கும் அதிகமானவர்கள் காயமுற்றிருப்பதாகவும், தெரிய வருகிறது. 

இப் பெரும் விபத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளிவரவில்லை. இது தொடர்பான விசாரணைகளைக் காவல்துறை தற்போது ஆரம்பித்திருப்பதாகச் செ செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மெக்கிக்கோவில் பாரிய வெடிவிபத்து - 31 பேர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com