யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறை தலைவர் தர்சனனிற்கு எதிராக நூற்றிற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை காவல்துறையிடம் வாக்குமூலமளித்துள்ளனர்.
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் முன்னாள் மற்றும் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளிடம் நேற்றைய தினம் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.
இசைத்துறை தலைவராக பணியாற்றி வந்திருந்த காலப்பகுதியில் மாணவிகளிற்கு பாலியல் துன்புறுத்தல்களை நேரிலும், தொலைபேசி வழியாகவும் தர்சனன் பிரயோகித்ததாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்கலைக்கழக நிர்வாகம் மூடிமறைக்க முற்பட்டிருந்த நிலையில் பேரவை மற்றும் மூதவை கூட்டங்களிலும் இவ்விவகாரம் விவாதிக்கப்படுவதாக மாறியிருந்தது.
இதனையடுத்து தற்காலிகமாக தர்சனன் இடைநிறுத்தப்பட்டுள்ள போதும் அரைச்சம்பள கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் மாணவர்களது முறைப்பாட்டினையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் இலங்கை காவல்துறையால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஸ இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேளை பலாலியில் அவரை மகிழ்விக்க மாணவிகளை அனுப்பிய விவகாரம் சூடுபிடித்திருந்தது.
இதனை வெளிக்கொணர முற்பட்ட ஊடகவியலாளர்கள் ஒரு சிலர் இராணுவத்தினரை கொண்டு அச்சுறுத்தப்பட்டு செய்திகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to பாலியல் துஸ்பிரயோக விவகாரம் யாழ்.பல்கலைக்கழகத்தில் சூடு பிடித்தது!