Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நல்லாட்சி அரசாங்கம் சமாதானத்தை ஏற்படுத்தவே ஆட்சிக்கு வந்தது. அந்தப் பணியினை தொடர்ந்து முன்னேற்றகரமாக செய்து வருகின்றது. அதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என்று நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையே உறவுகள் ஏற்பட வேண்டும் என்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்காகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்புக்கான விஜயமொன்றை நேற்று புதன்கிழமை மேற்கொண்டிருந்த  விஜயதாச ராஜபக்ஷ, மட்டக்களப்பு மங்களராம விகாரைக்குச் சென்று மத வழிபாட்டில் ஈடுபட்டதுடன் மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் அங்கு வருகைதந்திருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் சிறுபான்மையாக வாழும் சிங்கள மக்களை கவனிப்பதற்கு அவர்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சிங்கள பாராளுமன்ற உறுப்பினரோ, சிங்கள கிழக்கு மாகாண சபை உறுப்பினரோ யாருமே இல்லாமல் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகின்றனர் என்றும் விஜயதாச ராபஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

0 Responses to சமாதானத்தை ஏற்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம்: விஜயதாச ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com