Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் மறைந்த லசந்த விக்ரமதுங்கவுடன் தான் சில தடவைகள் தொலைபேசியில் பேசியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

லசந்த விக்ரமதுங்கவுடன், மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசியில் உரையாடும் ஒலிப்பதிவு தொகுப்பொன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இது தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, “லசந்தவுடன் நான் உரையாடியிருக்கிறேன். இந்த விடயம் புதிய விடயமல்ல.  லசந்த ஊடகவியலாளர் என்பதனால் ஏனைய ஊடகவியலாளர்களைப் போன்றே தொலைபேசி உரையாடல்கள் பதியப்பட்டிருக்கும்.” என்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்த காலத்திலேயே லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to லசந்தவுடன் நான் பேசியிருக்கிறேன்; தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com