Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் வெறுத்தார்கள், அவர்களை தோற்கடித்தார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த பல தசாப்தங்களில் சில உள்ளுராட்சி நிறுவன அரசியல்வாதிகள் ஊழல், மோசடி, முறைகேடுகளை மேற்கொண்டு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதன் காரணமாக அவர்களது அரசியல் கட்சிகளும்  பிரதிநிதித்துவப்படுத்திய அரசாங்கமும் அவர்களது தலைவர்களும் மக்களால் வெறுக்கப்பட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவிக்கு அடுத்தாக கூடுதல் நிறைவேற்று அதிகாரமுடைய உள்ளுராட்சி நிறுவன தலைவர்கள் எப்போதும் தமது அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ‘சுவர்ண நகரம்’ விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமது அதிகாரங்களை மக்கள் நலனுக்காக பாவிக்கும் அனைத்து அரசியல்வாதிகளும் மக்களால் பாராட்டப்படுவதாகவும் அனைத்து உள்ளுராட்சி நிறுவனங்களும் நல்லாட்சியின் மையங்களாக மாற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்களது பிரச்சனைகளை தேடிச்சென்று அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசியல்வாதிகளினதும் அரச அலுவலர்களினதும் பொறுப்பாகுமென தெரிவித்த ஜனாதிபதி, அபிவிருத்தி, நல்லாட்சி, நிதி முகாமைத்துவம், சமூக நலன்புரி செயற்பாடுகள் போன்றவற்றில் உள்ளுராட்சி நிறுவனங்கள் கொண்டிருக்கும் வரையறையற்ற அதிகாரங்கள் மூலம் தமது சேவை சிறப்பினை காட்டுவதற்கு அனைத்து உள்ளுராட்சி நிறுவன அரசியல்வாதிகளும் அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை மக்கள் வெறுத்தார்கள்; தோற்கடித்தார்கள்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com