வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென்கொரியாவை இலக்கு வைத்து விசேட இராணுவப் பயிற்சியை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இராணுவப் பயிற்சி தென்கொரிய அதிபர் இல்லமான புளூ ஹவுசை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படுவதாகவும் தெரிய வருகின்றது.
அண்மைக் காலமாக வடகொரியா நிகழ்த்தி வரும் அணுவாயுத மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்பில் சர்வதேசத்தின் எதிர்ப்புக்கு இணக்கம் தெரிவிப்பதாக கிம்மைப் பொறுத்தவரை இதுவரை தெரிய வரவில்லை.
வடகொரியாவின் இந்தப் பயிற்சிகள் குறித்து அதன் KCNA செய்தி ஏஜன்ஸி தகவல் அளித்துள்ள போதும் இப்பயிற்சிகள் எங்கு மேற்கொள்ளப் படுகின்றன என்பது குறித்தோ அல்லது வெள்ளிக்கிழமை தென்கொரிய பாராளுமன்றத்தில் அந்நாட்டு அதிபர் பார்க் கெயுன் ஹை மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்தோ எந்தவித செய்தியும் வெளியிடவில்லை.
வடகொரியாவின் இராணுவப் பயிற்சி காரணமாகத் தென்கொரிய அரசு தனது படைகளை தீவிர எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.

0 Responses to தென்கொரியாவை இலக்கு வைத்து விசேட இராணுவப் பயிற்சியை வழிநடத்தும் கிம்