Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தொடக்கத்தில் அனைத்து கேள்விக்கும் பதில் தருவதாக கூறிய ராம்மோகன ராவ், தன்னுடைய கருத்தை  தெரிவித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை. பாதியில் பேட்டியை முடித்தார்.

மணல் ஒப்பந்தங்கள், மகன் நிறுவனங்கள் குறித்து பேசவில்லை

வருமான வரி சோதனை குறித்து மனம் திறந்து பேசுவதாக முன்னாள் தமிழக தலைமை செயலர் ராம மோகன ராவ் தெரிவித்தார். அப்போது பேசிய அவர் தன் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையை கண்டித்த ராகுல்காந்தி மற்றும் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் வீட்டில் வருமான வரித்துறை எடுத்த ஆவணங்களை காட்டினார் ராம மோகன ராவ். என்னை மத்திய போலீஸ் வீட்டு காவலில் வைத்தது என்றும், என் மீது நடந்த சோதனை அரசியல் சட்டவிரோதம் என ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நான் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமை செயலர் நான் என்றும், சோதனை வாரண்டை என்னிடம் போலீஸ் காட்டியதாகவும், ஆனால் அதில் என் பெயர் இல்லை என்றும் ராம மோகன ராவ் தெரிவித்தார். என் மகன் விவேக் தனியாக
வசிப்பதாகவும் அவர் தெரிவித்தார். என் வீட்டில் ரூ.1.12 லட்சம் மட்டுமே என் வீட்டில் இருந்து எடுத்துள்ளதாகவும், எனது மகள் மற்றும் மனைவி நகைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் ராம மோகன ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் என் வீட்டில் எந்த விதமான தவறான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும், என் மகன் பெயரிலான வாரண்டை எடுத்து கொண்டு தலைமை செயலர் அறையை சோதித்ததாகவும் ராம மோகன ராவ் குற்றம் சாட்டினார். முதலமைச்சர், உள்துறை செயலாளரிடம் எதுவும் சொல்லாமல் தலைமை செயலகத்தில் சோதனை நடைபெற்றதாகவும் ராவ் விளக்கம் அளித்தார். அரசின் ரகசிய கோப்புகள் மட்டுமே எனது அறையில் உள்ளதாகவும், தலைமை செயலர் அறையில் நுழைய மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

தலைமை செயலர் அறையில் நுழைய மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வியு,ம் எழுப்பினார்.ஆனால், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

0 Responses to பதில் சொல்ல முடியாமல் பேட்டியை பாதியில் முடித்தார் ராம் மோகன் ராவ்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com