இந்த வருடம் புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை வெகு விமரிசையாகக் கண்கவர் வான வேடிக்கையுடன் உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.
முதன் முதலில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் கொண்டாடியுள்ளன. இந்திய நேரப்படி இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கே நியூசிலாந்தின் வெளிங்டனிலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நள்ளிரவு 12 மணிக்கு இடம்பெற்றுள்ளன.
தமது புவியியல் அமைப்பின் பிரகாரம் முதன் முதலாக டோங்கா உட்பட 2 நாடுகள் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கே 2017 ஆம் ஆண்டு புத்தாண்டை முதன் முதலில் வரவேற்றன. இதேவேளை நிலவின் ஈர்ப்பு விசை கடல்களின் இயக்கம் போன்ற காரணங்களால் நமது பூமியின் சுழற்சி என்பது எப்போதும் சீராக இருக்காது எனவும் புவி சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தைத் துல்லியமாக பூமியின் 400 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள அணுக்கடிகாரமே பிரதிபலிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த 1972 ஆம் ஆண்டு புவி சுழற்சியால் ஏற்படும் நேர வித்தியாசத்தை ஈடு கட்ட லீப் விநாடி முதன் முறையாக அறிமுகமானது. அன்று முதல் இதுவரை ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆம் திகதி 26 முறை லீப் விநாடி சேர்க்கப் பட்டுள்ளது. இதன் படி 2017 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்க ஒரு விநாடி தாமதமாகும் என சர்வதேச புவி சுழற்சி அமைப்பான IERS அறிவித்துள்ளது. இதேவேளை லீப் விநாடி குழப்பத்தைத் தவிர்க்க கூகுள் நிறுவனம் சிறப்பு ஏற்பாட்டை செய்திருப்பதாகவும் கூகுள் சர்வரின் கடிகாரம் இந்த ஒரு விநாடியை ஈடுகட்ட 20 மணி நேரம் சற்று மெதுவாக சுற்றும் எனவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 4 தமிழ்மீடியா வாசகர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் பிறக்கவுள்ள 2017 ஆம் ஆண்டு சுபீட்சமும் சந்தோசமும் நிறைந்த ஆண்டாகத் திகழ ஆசிரியர் குழு தமது நல் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றது.

0 Responses to ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடி வரும் உலக நாடுகள்..