ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவை விலக வேண்டும் என்று தனக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த துமிந்த திசாநாயக்க அச்சுறுத்தினார் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நாட்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னை அச்சுறுத்தவில்லை, என்றாலும் மைத்திரிபால சிறிசேனவோடு இருந்த துமிந்த திசாநாயக்க என்னுடன் தொடர்பு கொண்டு “இது எமது அரசாங்கம். எனவே, பதவியை கையளிக்காவிட்டால், நீதிமன்றம் சென்று அதை நாம் பெற்றுக்கொள்வோம்.” என்றார்.
துமிந்த திசாநாயக்கவே தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக பதவி வகித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to ‘மைத்திரிக்கு தலைமைப்பதவி கோரி துமிந்த திசாநாயக்க என்னை அச்சுறுத்தினார்’; கோத்தபாய ராஜபக்ஷ குற்றச்சாட்டு!