Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் சபை  இன்று அதிகாலை 12.20 மணியளவில் அறிவித்து இறுதி செய்தது.

தொகுப்புரைகள், நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை முதல் எழுவர் அடங்கிய விசேட  ஜூரிகள் முன்னிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்து ஆற்றுப்படுத்தப்பட்டன. கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி மணிலால் வைத்திய திலக்க, ஜூரிகளுக்கு தெளிவுரையளித்தார்.

அதன் பின்னர் எழுவர் அடங்கிய விசேட ஜூரிகள் தீர்ப்பை இன்று அதிகாலை 12.20க்கு அறிவித்தனர். அதன் பிரகாரம், குற்றஞ்சாட்டப்பட்ட சகலரும் விடுதலை செய்யப்பட்டனர். அதாவது, 3ஆம், 4ஆம், 5ஆம்,6ஆம் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதோடு, பிரசன்னமாயிருக்காத 1ஆம், 2ஆம் பிரதிவாதிகளையும் விடுவித்துள்ளது.

0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்கு; குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com