‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ பொதுமக்கள் குறைகேள் அலுவலகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த அலுவலகம் யாழ். மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 04ம் திகதி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு, தொடர்ச்சியாக மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கொள்ளப்படும். இதன்மூலம், ஜனாதிபதி நேரடியாக மக்களுக்கு தீர்வுகளை வழங்கவுள்ளார்.
கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் குறைகேள் அலுவலகம் ஜனாதிபதி செயலகத்தில் இதுவரை செயற்பட்டு வந்தது. எனினும் வடக்கு மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமலும், தீர்வுகள் கிடைக்காமலும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் மகஜர்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் பொது மக்கள் மத்தியில் நிலவி வந்தது.
அந்தவகையில், ஜனாதிபதிக்கு சொல்லுங்கள் எனும் தொனிப்பொருளில், வடக்கு மாகாணத்தில் இந்த அலுவலகத்தினை திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில், வடக்கு மாகாணத்திற்காக புதிதாக திறந்து வைக்கப்படவுள்ள இந்த அலுவலகத்தில் நியமிக்கவுள்ள அதிகாரிகளிடம் மக்கள் தமது பிரச்சினைகளை மகஜர் மூலமாகவோ, நேரடியாகவோ தெரிவிக்க முடியும்.

0 Responses to ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ பொதுமக்கள் குறைகேள் அலுவலகம் யாழில்!