புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 09ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ளது. இதன்போது, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் ஆராயவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு, சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் சுட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to புதிய அரசியலமைப்பு தொடர்பில் வரும் 06ஆம் திகதி முதல் கூட்டமைப்பு மூன்று நாட்களுக்கு ஆராய்வு: சம்பந்தன்