அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை சிங்கள மக்கள் எவரும் எதிர்க்கவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான பிணக்குகளை தீர்த்து வைப்பதில் மேற்கொள்ளப்படும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்த சட்டத்தில் பல சட்ட, அரசியல் பிரச்சினைகள் உள்ளன. அதிகாரப் பங்கீடு குறித்த விடயங்கள் தற்போது கலந்துரையாடப்படுவதுடன் அரசியலமைப்பில் திருத்தங்களும் செய்யப்படுகின்றன.
அது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது பற்றியும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் உரிய சமமான இடம் வழங்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.
1987ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து 13வது திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்படுமென அதில் உறுதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தற்போது மிகச் சிறந்த உறவு நிலவுகின்றது.” என்றுள்ளார்.

0 Responses to 13வது திருத்தச் சட்டத்தை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை: சரத்