நல்லாட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக வெளியில் பேசிக் கொண்டிருக்கும் கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்கள், இரகசியமாக அமைச்சுப் பதவிகளுக்காக எங்களிடம் பேசுகின்றனர் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியைச் சேர்ந்த பலரும் அரசாங்க முக்கியஸ்தர்களை தனித்தனியே சந்தித்து அமைச்சுப் பதவிகளுக்காக பேசியுள்ளதாகவும், எனினும் அமைச்சுப் பதவி வழங்கக் கூடிய கால எல்லை முடிவடைந்து விட்டதால் எதையும் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொடை கூட்டு எதிரணி நடத்தவுள்ள கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்; அரசியல் செய்ய எதுவும் இல்லாதவர்கள் மக்கள் பேரணிக் கூட்டம் என்ற பெயரில் அலைகின்றனர் என்று கூறியுள்ளார்.
அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவதாக இதுவரை எத்தனையோ நடவடிக்கைகள், வாய்ச்சவடால் இட்டவர்கள் இப்போதும் அதைக் கூறியே மக்களை ஏமாற்ற நுகேகொடையில் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளனர் என்று லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகக் கூறும் மஹிந்த அணியினர், அமைச்சுப் பதவிகளுக்காக எம்மிடம் பேசுகின்றனர்: லக்ஷ்மன் கிரியெல்ல