தமிழக மக்கள் முன்னெடுத்துள்ள ஜல்லிக்கட்டு உரிமை மீட்புப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கொழும்பிலும் எதிர்வரும் சனிக்கிழமை (ஜனவரி 21) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஆண்டாண்டுகாலமாக தமிழகத்தில் நிகழ்ந்துவந்த தமிழர் பாரம்பரியமான "ஏறு தழுவல் "நிகழ்வுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சாத்வீகமான முறையில் போராடிவரும் எம் தமிழக உறவுகளுக்கு எங்களது தார்மீக ஆதரவை காட்டும் முகமாகவும், தமிழர்கள் என்ற முறையில் எமது தொன்மையான பாரம்பரியங்களில் ஒன்றின் மீது விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலுக்கு எதிராக எமது குரலைப் பதிவுசெய்யும் முகமாகவும் , எதிர்வரும் 21.01.2017 ( சனிக்கிழமை ) பிற்பகல் நான்கு மணிக்கு, கொழும்பில், வெள்ளவத்தை 'லாஃப்ஸ் 'பல்பொருள் அங்காடிக்கு முன்பாக - கர்ஷியல் வங்கிக்கு அருகாமையில் - கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்த திட்டமிட்டுள்ளோம்.
அனைவரும் வருகை தந்து உங்களது தார்மீக ஆதரவை எம் தமிழக சொந்தங்களுக்கும், எம் பாரம்பரியத்திற்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எதிர்வரும் நாட்களில் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கு சுமூகமான தீர்வு வழங்கப்பட்டால் ஒழிய, இந்த கவனயீர்ப்பு நிகழ்வு குறித்த தினத்தில் நடந்தேதீரும்.” என்றுள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பிலும் போராட்டம்!