காலம் சென்ற அல்கொய்தா தீவிரவாத இயக்கத் தலைவனான ஒசாமா பின்லேடனின் மகனும் அரேபிய தீபகற்பத்தின் அல்கொய்தா பிரிவின் தற்போதைய தலைவனுமான ஹம்ஷா பின்லேடனை அமெரிக்கா தனது தீவிரவாதப் பட்டியலில் வியாழக்கிழமை சேர்த்துள்ளது.
ஹம்ஷா பின்லேடன் தலைமையில் அல்கொய்தா இயக்கத்துக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பதை முக்கிய நோக்காகக் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அல்கொய்தாவின் மூத்த தலைவரான அய்மான் அல் ஷவாஹிரி தலைமையில் செயற்பட்டு வரும் ஹம்ஷா பின்லேடன் தவிர இப்ராஹிம் அல் பன்னா என்ற இன்னொரு நபரையும் சேர்த்து சர்வதேசத் தீவிரவாதிகள் என அமெரிக்கா பிரகடனப் படுத்தியுள்ளது. வாஷிங்டனிலுள்ள புரூக்கிங்க்ஸ் புலனாய்வு நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளரான புரூஸ் றெயிடெல் கூறுகையில் ஹம்ஷா பின்லேடன் அல்கொய்தாவின் புதிய முகம் மட்டுமன்றி மிகத் திறமையான அதேநேரம் ஆபத்தான எதிரியும் கூட, என்று தெரிவித்துள்ளார். மேலும் அரேபியத் தீபகற்பத்தின் அல்கொய்தா பிரிவான AQAP இனது மூத்த உறுப்பினரே அல் பன்னா என்பவரும் ஆவார். இவர் AQAP இன் பாதுகாப்புப் பிரிவுத் தலைவராக செயற்பட்டதுடன் AQAP தலைவர்களுக்கு இராணுவ மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கி வருபவரும் ஆவார்.
சவுதி அரேபியாவில் பிறந்த பின்லேடன் மேற்குலகங்களுக்கும் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக செயற்பட்டதுடன் தனது தந்தையைக் கொன்றதற்காக அமெரிக்காவைப் பழி வாங்கும் நோக்குடனும் செயற்பட்டு வந்தவர் ஆவார். 2011 மே மாதம் பாகிஸ்தானின் அப்பொட்டாபாட் பகுதியில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் கண்டுபிடித்து சுட்டுக் கொன்றனர். இச்சமயத்தில் ஹம்ஷா பின்லேடன் ஈரானில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்ததாகவும் நம்பப் படுகின்றது.

0 Responses to அமெரிக்காவின் தீவிரவாதப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒசாமா பின்லேடனின் மகனின் பெயர்