கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் உறவினர்களை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மாவீரர்களுக்கான பொது நினைவுத்தூபியை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நினைவுத்தூபியை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களை நேற்று வியாழக்கிழமை விசாரணை செய்த பின்னர் பொலிஸார் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டினர்.
எனினும், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் நினைவுத்தூபி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மாவீர் தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அரசியல் அசிங்கத்தை அரங்கேற்றியதாக புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளி அ.ஈழம் சேகுவார அங்கு தெரிவித்தார்.
அத்தோடு, நினைவுத்தூபி அமைக்கும் பணிக்கான இடையூறினை சிவஞானம் சிறிதரனின் அழுத்தத்தினாலேயே பிரதேச சபைச் செயலாளர் மேற்கொண்டதாகவும் முன்னாள் போராளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

0 Responses to கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைத்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்பு!