போர்க்குற்றங்கள், சித்திரவதை, பாலியல் வல்லுறவு, காணாமல் ஆக்கப்படல் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படக் கூடாது என்று நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறையில் உள்நாட்டு நீதிபதிகளோடு குறைந்தது ஒரு வெளிநாட்டு நிதிபதியும் பங்கேற்கும் வகையிலான கலப்புப் பொறிமுறையொன்று உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணி தெரிவித்துள்ளது.
நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளிக்கப்பட்டது.
கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாலோசணை செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் சுமார் 5 மாதங்கள் வரை நீடித்தது. அதில் பெறப்பட்ட கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளைக் கொண்ட இறுதி அறிக்கை கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி நிறைவு பெற்றது. ஆனாலும், அதனை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படாத நிலையில், அது, சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் நேற்று கையளிக்கப்பட்டது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to போர்க்குற்றங்களுக்கு ‘பொதுமன்னிப்பு’ கூடாது; விசாரணையில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம்: நல்லிணக்கச் செயலணி