வெளிநாடு செல்ல வேண்டாம் என்று தன்னிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்லும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கிச் செயற்படுமாறே அவர் தன்னிடம் கோரியிருந்ததாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அந்த விஜயத்தை மேற்கொள்ளவேண்டாம் என இரா.சம்பந்தன் முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வெளிநாடு செல்ல வேண்டாம் என்று சம்பந்தன் என்னிடம் கோரவில்லை: விக்னேஸ்வரன்