உள்நாட்டு அரசியலில் தேரர்களின் வகிபாகம் அதிகரித்துள்ளது. அத்தோடு, அவர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “கோப் குழு அறிக்கை மீதான விவாதத்தைத் தடுப்பதற்காகவே லங்கா வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் உறுப்பினரான தெனியாவெல பாலித தேரரால், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியலில் தேரர்களின் வகிபாகம் அதிகரித்து விட்டது. நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விமல் வீரவன்ச சமுகமளித்திருந்த போது, பெல்கமுவ நாகல தேரர், அவருக்கு பிரித் நூல் கட்டிவிட்டார். மஹிந்தவின் ஆலோசகராக இந்தத் தேரர், செயற்பட்ட போது 60 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளமும் சொகுசு வாகனமும் வழங்கப்பட்டது” என்றுள்ளார்.

0 Responses to உள்நாட்டு அரசியலில் தேரர்கள் குழப்பங்களை விளைவிக்கின்றனர்: அநுரகுமார திசாநாயக்க