இனவாதம் பேசி மக்களை திசை திருப்புவதை விடுத்து நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு உதவத் தயாராகவுள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அபிவிருத்தியிலும், முதலீட்டிலும் நாட்டைக் கட்டியெழுப்புவது அவசியம். நாட்டிலிருந்து வேலைவாய்ப்பற்ற நிலையை ஒழித்துக்கட்டுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் எதிர்காலத்தில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்தியா, சீனாவுடன் நட்பு கொண்டாடியவர்களே தற்போது அந்நாடுகளுக்கு எதிராளியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “பாரிய சவால்களுக்கு மத்தியிலேயே அரசாங்கம் அபிவிருத்தி, முதலீடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்திருப்பது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கே. கடந்த மூன்று தினங்களில் எம்மால் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் திட்டங்களை ஆரம்பிக்க முடிந்துள்ளது. அம்பாந்தோட்டை அபிவிருத்தித் திட்டத்தோடு 26,000 தொழில் வாய்ப்புகளுக்கு வழியமைக்கப்பட்டுள்ளது.
இனவாதம் பேசி மக்களை ஏமாற்றுவதில்லை. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதிலேயே கவனம் செலுத்த வேண்டும். தேசிய அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டே முதலீடு மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்துக்கு இது தொடர்பில் நிலையான கொள்கையொன்று உள்ளது. அடுத்து வரும் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்த கொள்கை மாற்றம் பெறாது.” என்றுள்ளார்.

0 Responses to இனவாதம் பேசிக் கொண்டிராமல் நாட்டை முன்னேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்: ரணில்