வடக்கு - கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படாது. அது, முஸ்லிம்களின் சம்மதமின்றி சாத்தியமில்லாத விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்கள் அங்கீகரிக்காத எதனையும் தீர்வாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், வி.ராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஸ் பிரேமசந்திரன், சிவசக்தி ஆனந்தன், இரா.துரைரெட்ணம், சர்வேஸ்வரன், ரெலோ சார்பில் என்.சிறீகாந்தா, கே.கருணாகரம் (ஜனா), எம்.கே.சிவாஜிலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புதிய அரசியலமைப்பில் என்ன விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, தமிழ் மக்களின் கோரிக்கைகள் சார்பில் என்ன விடயங்கள் சாத்தியம் என்பது பற்றியெல்லாம் அங்கு பேசப்பட்டது.
அப்போது கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், வடக்கு- கிழக்கு இணைப்பு தவிர்ந்த தமிழ் மக்களின் மற்றைய கோரிக்கைகள் நிறைவேறும் சாத்தியம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

0 Responses to வடக்கு - கிழக்கு இணைப்பு புதிய அரசியலமைப்பில் சாத்தியமில்லை; த.தே.கூ கூட்டத்தில் இரா.சம்பந்தன் தெரிவிப்பு!