மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முதலமைச்சர்களுக்கும் இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தை எந்தவித இணக்கமும் இன்றி நிறைவடைந்துள்ளது.
நேற்றைய பேச்சுவார்தையில் வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும், எனினும் எந்தவித இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆட்சிப் பொறுப்பிலுள்ள 07 மாகாண சபையைச் சேர்ந்த முதலமைச்சர்களில் 06 பேர் கலந்து கொண்டதுடன், வட மத்திய மாகாண சபை முதலமைச்சரான பேசல ஜயரட்ண இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபயவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, காமினி லொக்குகே மற்றும் பொது ஜன முன்னணியின் தலைவரான ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆயினும், எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவதற்கு தீர்மானித்ததாக மத்திய மாகாண முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவுடனான பேச்சில் எந்தவித இணக்கமும் இல்லை: சுதந்திரக் கட்சி முதலமைச்சர்கள்!