நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எந்தவொரு தருணத்திலும் கூறவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுமதி வழங்கப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகள் யாவும் கலந்துரையாடியுள்ளன. மிகவிரைவில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
சுவிற்ஸலாந்தின் டாவோஸ் நகரத்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படாது என்று மைத்திரி கூறவில்லை: ரணில்