நாடு கடந்த தமிழீழம் என்பது கூட்டு எதிரணி (மஹிந்த அணி) போன்று சட்டரீதியற்ற அமைப்பு என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமோ அல்லது நாடோ உலகில் எந்தவொரு பகுதியிலும் இல்லை. நாடு கடந்த தமிழீழம் எனத் தம்மைத்தாமே கூறிக்கொள்ளும் உருத்திரகுமாரன் தலைமையிலான குழுவொன்று கூட்டு எதிரணி போல கனவு கண்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உதய கம்மன்பில எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச ரீதியாக வியாபித்துள்ள தமிழ் ஈழ அரசாங்கமென அழைக்கப்படும் அரசாங்கம் எதுவும் இல்லை. எனினும் நாடு கடந்த தமிழீழம் என தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் நபர்கள் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை எந்தவொரு நாடோ, ஐக்கிய நாடுகள் சபையோ, சர்வதேச அமைப்போ சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
‘கூட்டு எதிரணி’ எனக் கூறிக் கொள்ளும் நீங்கள் எந்தவொரு சட்டரீதியான ஏற்றுக்கொள்ளலும் இல்லாமல் சுதந்திரமாக செயற்பட்டு வருவதைப்போன்று உருத்திரகுமாரன் தலைமையில் குழுவொன்று செயற்பட்டு வருகிறது. கூட்டு எதிரணியினர் நிழல் அமைச்சுக்களை நியமித்து செயற்படுவதுபோல அவர்களும் செயற்படுகிறார்கள். எனினும் சட்டரீதியாக அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பை முதலில் தடைசெய்தநாடு அமெரிக்கா. எனவே அங்கு புலிகள் அமைப்புக்கோ அல்லது அதற்கு ஆதரவான அமைப்புக்கோ சட்டரீதியான அனுமதி எதுவும் வழங்கப்படாது. நாடு கடந்த தமிழீழம் என்ற பெயரில் எந்தவொரு நிறுவனமோ அல்லது நாடோ உலகில் எந்தவொரு பகுதியிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதேநேரம், அவுஸ்திரேலிய புள்ளிவிபரவியல் பணியகம் 'தமிழ் ஈழம்' என்பதை அதன் இணையத்தளத்தில் ஒர் வகைப்படுத்தப்பட்ட நாடாக பட்டியற்படுத்தியது. இது தொடர்பில் 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் 08ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அந்நாட்டு அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. மறுநாளே இது நீக்கப்பட்டது.
தமிழ் ஈழம் என்பதை ஓர் நாடாக எப்போதும் அங்கீகரிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா எழுத்துமூலம் அறிவித்தது. இலங்கையின் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் தொகைமதிப்பில் உள்ளடக்கப்போவதில்லையென அவுஸ்திரேலியா உறுதியளித்துள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
டென்மார்க் குடிவரவு சேவை இணையத்தளத்தில் டென்மார்க்கின் விசா பெறும் தகுதியுடைய நாடாக தமிழ் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசுக்கு எடுத்துக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பிழை நிவர்த்தி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி டென்மார்க் அரசாங்கம் தவறுக்கு மன்னிப்பும் கோரியிருந்தது.
அரசாங்கம் தொடர்ச்சியாக விழிப்புடன் இருக்கிறது. ஐக்கிய அமெரிக்கா, கடனா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட தடை செய்யப்பட்ட நபர்கள், தொகுதிகள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் இயக்கமும் உள்ளது. இது தொடர்பில் அரசு விழிப்புடன் இருக்கின்றது.” என்றுள்ளார்.

0 Responses to நாடு கடந்த தமிழீழம் ‘மஹிந்த அணி’ போல சட்டரீதியற்ற அமைப்பு: மங்கள சமரவீர