காணாமற்போனோர் தொடர்பில் எந்தத் தகவலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பில் தெரிந்த சகல தகவல்களையும் வழங்கத் தயார் என பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“காணாமற்போன தங்களது உறவுகளை கண்டுபிடித்துத் தாருங்கள்” உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் இன்று வியாழக்கிழமை நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில், காணாமற்போனோர் தொடர்பிலான விடயம் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது. அதன்போதே, மேற்கண்டவாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்வது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எமக்கு அறிவித்தார். காணாமற்போனோர் தொடர்பாக தெரிந்த சகல தகவல்களையும் தரத்தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். இந்த மக்களை சந்திப்பதற்காக நாளை (இன்று 26) அமைச்சர் சுவாமிநாதன் வவுனியா செல்லவுள்ளார்.
காணாமற்போனவர்கள் இலங்கையில் உள்ளனரா என்பது குறித்து எந்தத் தகவலையும் பெற முடியாதுள்ளது. அவர்கள் சட்டபூர்வமாக வெளிநாடு சென்றமைக்கான தகவல் எதுவும் கிடையாது. திருட்டுத்தனமாக படகில் சென்றனரா அல்லது இறந்தார்களா என்று தெரியவில்லை. அவர்கள் சென்றிருக்கலமென சிலர் கருதுவதோடு இறந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.” என்றுள்ளார்.

0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை: ரணில்