நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தீபா பேரவை அமைப்பு, அன்றாடம் தோன்றிய வண்ணம் உள்ளது.
அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்ட வாசுதேவநல்லூர் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. துரையப்பா புயலுக்கும் நெருப்புக்கும் திரைபோடவோ. மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ என்கிற எம்.ஜி.ஆரின் திரைப்படப்பாடலை மேற்கோள் காட்டி ஜெய.தீபா தலைமை ஏற்க வா என வெளிப்படையாக முதன் முதலாக ப்ளக்ஸ் வைத்திருப்பதை கட்சியினர் பொதுமக்கள் புருவங்கள் உயரப்பார்க்கின்றனர். தீபாவை அரசியலுக்கு வர வற்புறுத்தி, அவர் சம்மதம் தெரிவிக்கும் வரையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியின் அமைப்பானர் சுப்பிரமணி தலைமையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார்கள் தீபா பேரவையினர். கோவில்பட்டியில் ’ஜெ’ தீபா பேரவை அமைப்பாளர் சிவபெருமாள் தலைமையிலும் ஆரம்பிக்கப்பட்டு அந்த சட்ட சபை தொகுதியில் மட்டும் 50 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்கும் டார்கெட்டையும் லட்சியமாக வைத்துள்ளனர்.

0 Responses to நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தீபா பேரவை அமைப்பு!