பஹ்ரெயினில் நாட்டை விட்டு வெளியேற்றப் படவேண்டியவராக அரசால் கருதப் படும் முக்கியத்துவம் வாய்ந்த ஷியா பிரிவு மதகுருவான ஈஸா காஸ்ஸிம் என்பவர் வசிக்கும் நகரில் செவ்வாய்க்கிழமை போலிசார் ரெய்டு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 5 பேர் கொல்லப் பட்டும் கிட்டத்தட்ட 286 பேர் கைது செய்யப் பட்டும் உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சுன்னி பிரிவு பெரும்பான்மை முஸ்லிம்களால் ஆளப்பட்டு வரும் பஹ்ரெயினில் உள்ள இந்த ஷியா கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதிலேயே 5 பேர் கொல்லப் பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சும் உறுதிப் படுத்தியுள்ளது. பஹ்ரெயின் தலைநகர் மனமாவுக்கு அருகே உள்ள டிராஷ் என்ற என்ற கிராமத்தில் ஷியா மதகுருவான இஷா காஸ்ஸிம் இனது இல்லத்துக்கு வெளியே தான் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டதாக உள்துறை அமைச்சு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. ரெயிடின் போது நடைபெற்ற கலவரத்தில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கற்களை பாதுகாப்புப் படையினர் மீது வீசியதாகவும் பதிலுக்கு அவர்கள் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயம் அடைந்ததாகவும் நேரில் கண்டவர்கள் AFP ஊடகத்துக்குத் தகவல் அளித்துள்ளனர்.
கைதான 286 பேரிலும் சிலர் ஜாவு சிறையில் இருந்து தப்பித்தவர்கள் என்றும் ஈஸா காஸ்ஸிம் இனது குடியிருப்பினில் பதுங்கியிருந்த பல தீவிரவாதிகளும் இதில் அடங்குவதாகவும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. காஸ்ஸிம் பஹ்ரெயினின் ஷைட்டி (ஷியா) சமூகத்தினரின் முதன்மையான ஆன்மிகத் தலைவராகக் கருதப் படுவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பஹ்ரெயினில் அரச பாதுகாப்புப் படையினரால் நடத்தப் பட்ட இந்த மோசமான வன்முறையானது சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விஜயம் செய்ததால் ஏற்பட்ட எதிர்மறையான முதல் உறுதியான விளைவு என ஈரானின் வெளியுறவு அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷரிஃப் கருத்துத் தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் பஹ்ரெயின் அரசர் ஹமாட் இனை சவுதி அரேபியாவில் டிரம்ப் சந்தித்ததாகவும் இதற்கு முன் இருந்த அமெரிக்கக் கொள்கையை விடத் தனது கொள்கை முற்றிலும் எவ்வாறு மாறுபட்டது என்று அவருக்கு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. இச்சந்திப்பு குறித்துத் தகவல் அளித்த BIRD எனப்படும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பஹ்ரெயினின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்பு கூறுகையில், பஹ்ரெயின் அரசுக்கு உதவியாக மன்னர் ஹமாட்டுக்கு டிரம்ப் வெற்றுக் காசோலை ஒன்றை அளித்ததாகவும் இதற்கு முன் பஹ்ரெயினுக்கு ஆயுத உதவியும் அளித்து வந்த காரணத்தால் அங்கு இடம்பெற்று வரும் அடக்குமுறையின் இரத்தக்கறை அமெரிக்காவின் கைகளிலும் படிந்த ஒன்றே என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பஹ்ரெயினில் ஆர்ப்பாட்டக் காரர்கள் சுட்டுக் கொல்லப் படுவது குறித்து பாதுகாப்புப் படையினர் மீது சுதந்திரமான விசாரணை ஒன்று நடத்தப் பட வேண்டும் என அங்கிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

0 Responses to பஹ்ரெயினில் கலவரம்: 5 பேர் பலி, 286 பேர் கைது